தொலைதூர காதல்

தூரம் அது நீளம் ---- இருந்தால் என்ன ?
என் இதயம் அதில் இருக்குது
உன் பிம்பங்கள்
காதல் கதை பேச தினம்
காத்துதான் இருக்குது என் கைபேசிகள்
தொல்லையாய் தினம்
தொடர்ந்துதான் வருவேன் கைபேசி செய்திகளாய் .....................
மின்னூட்டல் மொத்தமாய் ஏற்றி வைக்கிறேன்
மொத்தமாய் உன்னிடம் பேசி தீர்க்க ........
என் உள் உணர்வு உன்னை நினைக்க
உடனே ஒலிக்குது உன்பெயரோடு கைபேசியும் ...........
அரைமணிநேரம்
அரை நிமிடமாய்
மாறுது
அவன் மட்டும் என்னோடு
பேசுகையில் ............