மௌனம் கேட்கும் பாடல்

மௌனம் கேட்கும் பாடல்

உன் நியாபக அலைகள்
என் கன்னத்தில் முத்தமிட
என் இமை
அதை எண்ணி
கொஞ்சம் இருட்டிடுமே !
உன் காலடி ஓசை
என் கைபிடித்து அழைத்து செல்ல
என் சொப்பனம்
சொர்கம் என ஆகிடுமே!


உன் இமையின் ஓரம் வந்து
உன் இதயம் உள் சென்று
உன் உயிராய் உறையத்தானே .....
உள்ளம் உருகி பாடுகிறேன்


என் வாழ்வின் காலை மாலை
தோன்றும் கதிர்நிலா வேண்டாம்
என் ஆயுள் காலம் முழுதும்
உன் கண் போதும் என்றிடுதே !

உன் காதல் அது
காலடி தடம் போல்
நன் விட்டும் என்னை தொடரும் மருமம் என்ன??

உன் நியாபக அலைகள்
என் கன்னத்தில் முத்தமிட
என் இமை அதை எண்ணி
கொஞ்சம் இருட்டிடுதே!!!

எழுதியவர் : மதி (20-Jun-17, 12:46 am)
பார்வை : 143

மேலே