காதலியின் வர்ணிப்பு

ஒரு வெள்ளி நிலவு
எட்டிப் பார்க்குதே!
என் நெஞ்சை கொஞ்சம்
தட்டிப் போகுதே!
காதல்ல தீயில்
தள்ளி விடுதே!
முத்த பேயில்
மூழ்க செய்தே!



ஏய் பெண்ணே !
என்னை கொள்ளாதடி!
உன் கண்ணால்
என்னை வெல்லாதடி!

உன்னை நோக்கியே
என் பார்வை பாயுதே!
தேய்பிறையாய்
இதயம் தேயுதே!
உன் கூந்தலில் மல்லிகை வாசம் வருதே!
உன் இதழ் இரண்டில்
மூலிகை வாசம் தருதே!


நீ பனித்துளியாய்
என் மீது விழுத்திடு...
உன் விழி வழியே
என்னை கவர்ந்திடு...
உன் முத்தம் கலந்த
யுத்தம் நடத்திடு...
யுத்தம் போரில்
என்னை கொன்றுடு...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (20-Jun-17, 10:20 pm)
சேர்த்தது : ப தவச்செல்வன்
பார்வை : 509

மேலே