உனக்குள் முழுதாய் சீரணமாகிறேன்

உனக்குள் முழுதாய் சீரணமாகிறேன்......

முரட்டு உன்அதரம் மோதிப் பதித்த
மட்டில் அடங்கா காதல் முத்திரை
காய்ப்புகளாய் என்தேகம் எங்கும்....
கள்ளத்தனமாய் அதை உள்ளூர ரசித்து
அக்கனங்கள் கனிய காலம் விழைகிறேன்.

களைந்த ஆடையை உன்கரம் பற்றிட
கலகலத்து பரவிடும் உதிர நாளங்கள்
உச்சிமுதல் அடிவரை அனலாய் உரசி
அனிச்சையாய் என் அவயங்கள் அருகி
உனை ஆலிங்கனம் செய்திட துடிக்கின்றேன்...

கதித்துத் தவிக்கும் மோகத் தீயில்
கனன்றுக் கொதித்த உன் தகைமார்பில்
படர்ந்து வீழ்ந்தப் பனித்துளியாகி
கிரங்கி விழுங்கும் உன் விழிதாபத்தில்
இழந்து முழுதாய் கலக்கின்றேன்...

காட்டுப்பசியில் உணவை வளைத்து
விழுங்கிக் கிடக்கும் மலைப்பாம்பாய்
அசைவற்று அருகில் சயனத்தில் நீ...
கட்டுக்கடங்கா உன்காதலுக்கு இரையாகி
உனக்குள் உணர்வாய் சீரணமாகிறேன்...

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-Jun-17, 8:42 pm)
பார்வை : 98

மேலே