உனக்காக

கண்வழியே அம்பெய்தாய்,
காற்றெனவே பறக்கவைத்தாய்.
முன்பின் நான் பார்த்ததில்லை,
அழகிலக்கண பதுமைச்சிலை!

உன் பெயரெழுத முற்பட்டேன்,
எழுதுகோல் வெட்கியது.
இருநொடி இமை மூடி நின்றேன்,
கண்கள் எனைத் திட்டியது!

நிலமாக நீ,
மழையாக நான்.
உன்மீதென் பாடல் படரும், என்றும்
உனக்கான என் தேடல் தொடரும்!!

எழுதியவர் : விக்னேஷ் ச (22-Jun-17, 3:33 pm)
பார்வை : 514

புதிய படைப்புகள்

மேலே