நட்பு

........நட்பு.......

காலங்களின் சுழற்சியிலும்
நமக்காய் காத்து நிற்கும்
ஓர் உறவு..
செல்லும் பாதைகளெங்கும்
பூத்துக் குலுங்குமே நட்பூ..

வேடங்கள் தரிப்பதில்லை
முகமூடிகள் அணிவதில்லை
நேசங்களைப் பரிமாறி
அன்பினை அன்னையாய்
வாரி வழங்கிடுமே நட்பு...

கரங்களில் கண்ணீரை ஏந்தி
மனங்களில் இன்பத்தை புகுத்தி
தோள்களை தலையணையாய்
மாற்றி தோழமையோடு நம்மைத்
தாங்கிப் பிடித்திடுமே நட்பு...

கவலைகள் கூட அலறியோடும்
நட்பூக்கள் அணைப்பில் இருந்தால்
புன்னகை மட்டும் அனுதினமும்
பூக்கும் நண்பர்கள் நம் அருகே
இருந்தால்...

நேரங்கள் நகர்வது தெரிவதில்லை
காலங்கள் கடந்தாலும் மாறுவதில்லை
இறுதிவரை இணைந்து வரும்
இலக்கணமாய் விளங்கிடுமே
நட்பு...

எழுதியவர் : அன்புடன் சகி (22-Jun-17, 4:58 pm)
Tanglish : natpu
பார்வை : 975

மேலே