என் நினைவு துளியும் இல்லையோ
என் நினைவு துளியும் இல்லையோ??
புன்னகைத்து கைகோர்த்து
கடத்திய நிமிடங்களை
மறதியெனும் பேர்சூடி
மறந்து போனதேனோ!!!!
தொலைதூரம் சென்ற உன்
நினைவுகள் மட்டும் என்னிடம்....
தொலைபேசி வழியினிலே
உன்னை தேடி தேடி சோர்ந்தேபோனேன்....
ஏன் மறதியை மட்டும்
வைத்துக்கொண்டாய் உன்னிடம்??
உன்னை கண்டிடும் என் ஆசை
நிறைவேற்ற வேண்டிக்கொண்டேன்.......
கனவின் வழி வந்து
கள்ள நாடகம் செய்து
வேண்டுதல் நிறைவேற்றும்
கடவுளின் நன்மனம் உனக்கில்லையோ!!!
சண்டையின் முடிவில்
சமரசம் பேசி உன்னோடு
இழையோடிய என் மனம்
இன்றும் உனக்கென சில
நிமிடங்களை தனித்துவைக்க
நீயோ எங்கேயோ ஒதுங்கி நிற்பதேன்???
என் கேள்விகள் யாவும் விடை தெரியாமல்
எனக்குள்ளே தவித்து நிற்க
விடைகூற முயலாமல் நீ இருந்தும்
உன் நலம் ஒன்றை மட்டுமேனும்
அறிவித்து என்னை கடந்துசெல்
உன் நினைவுகளோடு வாழும்
இந்த ஆருயிர் தோழிக்கு அதுவே போதும்!!!!!!