ஒருதலையாய்

பக்கம் பக்கமாய்
கவிதை எழுதுகிறேன் உன்
பக்கத்தில் அமர காத்திருக்கிறேன்

வெட்கம் உனக்கு அழகு
என்னிடத்தில்
தர்க்கம் செய்யும்
வேளையிலோ
பேரழகு

மல்லி சூடிடும்
இன்ப வள்ளியே
உன் கள்ளப்
புன்னகையைக் கண்டு
கரைந்து போகிறேன்
நானடி.

தேடாதோ உன்
இரு விழி என்னைத்
தேடாதோ.
தீராதோ
உன்னைத் தேடித்தேடியே
என் விழியின் வலி
தீராதோ.
பாடாதோ
காதல் ராகத்தை
உன் மனம் பாடாதோ.

என் காதலை
உன்னிடம்
சொல்ல முனைவதும்
அதனை நீ
மறுப்பதும்
வாடிக்கை
மற்றவற்கோ
இது வேடிக்கை.

எழுதியவர் : Parithi kamaraj (22-Jun-17, 8:24 pm)
Tanglish : oruthalaiyaay
பார்வை : 197

மேலே