புதுக்கவிதை

இழிநிலை தவிர்க்க இறுதிவரை போராடு

பாரதிதாசன் சான்றிதழ் போட்டியாளர்

இழிவாக நினைப்பதற்கு நாம்மொன்றும்
இச்சகத்தில் பிறக்கவில்லை புரிவீரே !
பழிபோடும் சமுதாயம் நாளும்தான்
பக்குவத்தை அறியாத முட்டாள்தான் .
விழியாக இருப்போமே அனைவருக்கும்
விலக்காது பேணுங்கள் ஆதரவாய் .
மொழிகின்ற சொல்லெல்லாம் உண்மைதானே
மொத்தமாய்க் காத்திடுவீர் மங்கையரை !!!


தீயுனுள்ளே போடுவோமே இழிநிலையை
தீபமாக எரியட்டும் எம்மருங்கும்
பாயுனுள்ளே சுருண்டிடவும் நாமெல்லாம்
பாவங்கள் செய்வில்லை உணர்வீரே !
நோயான மனத்தினையும் வளர்க்காதீர்
நொடிப்பொழுதும் சோராது பணிசெய்வீர் !
தாயாக நமைநோக்கும் நிலைமையினைத்
தனதாக்கிக் கொண்டிடவே போராடுவோம் !!!


இறுதிவரை போராட்டம் நமக்குந்தான்
இம்சையான உலகத்தில் பிறந்ததாலே .
மறுப்பின்றி சிறையிடுவர் விலங்கினத்தை
மனிதத்தை விலைபேசி மறந்திடுவர் .
பொறுப்பின்றி அரசாங்கம் நடந்துகொள்ளும்
போட்டிடுமே சட்டங்கள் கைநாட்டாய் !
வெறுப்புடனே வாழ்க்கையுமே சென்றிடுமே
வேதனையின் இழிநிலைதான் தவிர்த்திடுவோம் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Jun-17, 2:28 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 65

மேலே