சிற்பி யார் -- புதுக் கவிதை
சிற்பம்
தலைப்பு -- சிற்பி யார் ?
சிற்பம் செதுக்கிய சிற்பி யாரோ !
கற்பனையில் சிறந்தவரோ கலையில் பெரியோரோ !
பொற்பதம் பணிகின்றேன் போற்றித் தொழுகின்றேன் .
விற்பனை செய்யாத விடிவெள்ளி அவரோ !
அற்புதம் செய்கின்றார் ஆதிக்கம் உளியாலே
மற்போர் புரிகின்றார் மறவரினப் பிறப்போ !
பற்பதம் சொல்லிப் பலர்முன்னே பாடுவேன் !
சிற்பியே ! செப்புக ! நீர் யாரென்றே !!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு . 323 )

