சொல்லும் பொருளும் 15 - ஆசு, மாசு, வீசு, மூசு

சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும்; ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. எனவே ஆசு, மாசு, வீசு, மூசு என்ற நான்கு சொற்களை இங்கு பார்ப்போம்.

ஆசு என்பது பற்றாசு (உலோகத் துண்டுகளைப் பற்றவைக்கப் பயன்படுத்தும் பொருள்) போலச் சீர்களை இணைக்கும் ஒன்று அல்லது இரண்டு அசைகளைக் குறிக்கும்.

ஆசிடை இட்ட எதுகை - ஆசு என்றால் பற்றுக் கோடு. எதுகையாக வரும் எழுத்துக்கு முன் ய், ர், ல், ழ் என்ற எழுத்துகள் நான்கில் ஒன்று வந்தால் ஆசிடை இட்ட எதுகை எனப்படும்.

’ழ்’ ஆசிடையிட்ட - கா’ழ்’ப்புணர்ச்சி - எதுகை, ’ன்’ ’ம்’ மெல்லின எதுகை - இ’ன்’சொலால், செ’ம்’பொருள் - அமைந்த நேரிசை வெண்பா

(திருக்குறட் கன்னியப்ப வெண்பா)

கோப்பை நிறையவும் தேனிருக்கக் கோபமுடன்
கா’ழ்’ப்புணர்ச்சி வேண்டாமே கன்னியப்பா - காப்பாகும்
இ’ன்’சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செ’ம்’பொருள் கண்டார்வாய்ச் சொல். 91 இனியவைகூறல்

’ழ்’ ஆசிடையிட்ட - கா’ழ்’ப்புணர்ச்சி - எதுகை, ’கு’ ’ற்’ வல்லின எதுகை - த’கு’தி, பா’ற்’பட்(டு) - அமைந்த நேரிசை வெண்பா

கோப்பை நிறையவும் தேனிருக்கக் கோபமுடன்
கா’ழ்’ப்புணர்ச்சி வேண்டாமே கன்னியப்பா - காப்பாம்
த’கு’தி எனவொன்று நன்றே பகுதியால்
பா’ற்’பட்(டு) ஒழுகப் பெறின். 111 நடுவு நிலைமை
- வ.க.கன்னியப்பன்

ஆசு 1

1. Fault; குற்றம். அரியகற்றாசற்றார் கண்ணும் (குறள், 503)
2. ஆணவ மலம் (சிவப்பிர உண்மை 42)
3. Trifle, anything small or mean; அற்பம.
4. Minuteness, fineness, acuteness; நுட்பம். தேசிக மென்றிவை ஆசி னுணர்ந்து (சிலப் 3, 47)
5. Doubt; ஐயம். அமலனை யாசற வுணர்ந்த வமலர் (ஞானா. 66. 17)
6. Trouble, distress; துன்பம். ஆசுகவயந்தீர் பெய்த வறிமதி. (ஞானா.24, 4)
7. Support, prop; பற்றுக்கோடு. ஆசா கெந்தை யாண்டுளள் கொல்லோ (புறநா. 235)
8. Hilt; வாளின்கைப்பிடி. குற்றுடைவாள் ஆசுங்கண்டமும். (S.I.I. ii, 185)
9. Armour, coat of mail; கவசம்
10. Steel gloves; கைக்கவசம்
11. Soldering powder; பற்றாசு
12. Metrical syllable affixed to the third foot of the second line of நேரிசை வெண்பா; நேரிசை வெண்பாவின் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்குமிடையிற் கூட்டப்படும் அசை (காரிகை. செய்.3)
13. Consonants ய், ர், ல், ழ், intervening between the first and second syllables of a rhyming foot in one or two lines of a stanza;
எதுகையிடையில் வரும் ய்.ர்.ல்.ழ்.என்னும் ஒற்றுக்கள். (காரிகை. ஒழிபி 6)
14. Small tube through which yarn is conducted from the spindle of a spinning wheel to a machine; நூலிழைக்குங் கருவிகளுள் ஒன்று
15. Mark, butt; இலக்கு

ஆசு 2

1. Quickness, swiftness; விரைவு. அக்கண மாசுவினாசுகன் மைந்தன் (பாரத. புட்ப 67)
2. Extempore verse; ஆசுகவி

ஆசு 3

Mould; அச்சு

ஆசு 4

A kind of paddy; இடைக்கார் நெல்வகை

ஐந்தாம் திருமுறை - திருநாவுக்கரசர் தேவாரம்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே. 1

மாசு 1

1. Spot; மறு. உள்ள மாசறக் களைவோர் (ஞானா. 39, 14)
2. Stain, taint, tarnish; அழுக்கு. மாசி றூவுடை (திருமுரு. 138)
3. Defect, fault, flaw; குற்றம். மாசறு காட்சி யவர்க்கு (குறள் 352)
4. Perversity; விபரீதம் (சி. சி. அளவை, 2)
5. Blackness; கருமை (யாழ் அக)
6. Darkness; இருள். மடி யென்னு மாசூர (குறள், 601)
7. Cloud; மேகம்
8. Sin; பாவம்
9. Evil; தீமை. மாசெனக் கெய்தவும் (கம்பரா. சிறப்பு 6)
10. Dust; தூளி. நெரிந்தன மாசுண நெற்றியே (தக்கயாகப் 524)
11. The Milky Way; பால்வீதி மண்டலம்
12. cf. ஆசு1. Trifle; அற்பம்
13. Ordure; மெய்ம் மலம்
14. Afterbirth; நஞ்சுக்கொடி
15. Bile; பித்தநீர்
16. Phlegm; கோழை
17. Film in the eye; கண்ணின் காசபடலம். மாசு மிகுதியாற் கண்ணொளி யிழந்தார். (சி. போ. பா. 8, 4, பக். 186, சுவாமிநாதம்)
18. Cord of a net; வலைவடம். (சாமதீப. 448.)

மாசு 2

Mash, dough; குழப்பின மா

வீசுதல்

1. To throw, fling, as a weapon; to cast, as a net; எறிதல், நின்ற மண்ணாயினுங் கொண்டு வீசுமினே (திவ். இயற். திருவிருத் 53)
2. To flap, as wings; சிறகடித்தல். வீசுஞ் சிறகாற் பறத்திர் (திவ். இயற். திருவிருத். 54)
3. To swing, as the arm; ஆட்டுதல். மூங்கில் போன் றிருந்துள்ள தோள் வீசி (திவ். பெரியதி. 3, 7, 5, வ்யா)
4. To fan; இரட்டுதல், முழவுத் தோளோச்சித் தண்ணென வீசியோயே (புறநா. 50, 13)
5. To wave, flourish, as a sword; சுழற்றுதல். வருமாய ரோடுடன் வளைகோல் வீச (திவ். பெரியாழ் 3, 4, 6)
6. To strike, beat, flog; அடித்தல். கழியால் அவனை வீசினான்.
7. To open out, spread; to lengthen, stretch; விரித்து நீட்டுதல். இருஞ்சிறை வீசியெற்றி (கம்பரா. சடாயுவுயிர் 107)
8. To accumulate; மிகுத்திடுதல் (அரு.நி)
9. To give liberally; வரையாது கொடுத்தல், இரவலர் புன்கண்டீர நாடொறும் உரைசானன்கலம் வரைவில் வீசி (பதிற்றுப். 54, 8)
10. To spill; சிந்துதல், கண்ணீர்க் கடலாற் கனைதுளி வீசாயோ (கலித். 145)
11. To strew, scatter; sow, as seeds; சிதறுதல். கொள்பத மொழிய வீசிய புலனும் (புறநா 23)
12. To lay aside, throw off; களைதல். உடலுறு பாசம்வீசா தும்பர்ச் செல்வாரும் ஒத்தார் (கம்பரா. கடறாவு. 11)
13. To abandon, to leave off, to drop;
செய்யாமொழிதல். சுடுவேனது தூயவன் வில்லினாற்றற்கு மாசென்று வீசினேன் (கம்பரா சூளா 18)

1. To blow, as the wind; காற்று முதலியன அடித்தல். வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் (தேவா. 1203, 1)
2. To spread; to be diffused or emitted, as fragrance, rays, etc; பரவுதல். ஞானவாசம் வீசி ப்ரகாசியா நிற்ப (திருப்பு. 1132)
3. To be emitted, as a bad smell; துர்நாற்றம் அடித்தல்.


மூசு
1. Swarming, thronging; மொய்த்தல், வண்டு மூசறா (சீவக 418)
2. Green or unripe fruit; இளங்காய். பலா மூசு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jun-17, 1:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 826

மேலே