இரு கரை இணைவதில்லை

இல்லாத ஊருக்கு
வழிசொல்லுற..
பொல்லாத காதலால்
எனைக்கொல்லுற..
முள்மேல படுத்து
தூக்கம் இன்றி தவிக்கிறேன்.
கல்பட்ட கண்ணாடியா
நான் உடைஞ்சி கிடக்குறேன்.
கோலத்துக்குள் புள்ளியா
சிக்கியவ நான் தான்.
ஆலமரபேயா ஆட்டுறியே
நீதான்.
புயல் ஒன்னு எனக்குள்ளே
புகுந்துடிச்சி.
உயிர்வேர் அறுந்து விழுந்திடுச்சி.
ஒருவார்த்தை நீ சொன்னடா.
மொத்த உசுரும் உன் பின்னடா.
இரவும்,பகலும் ஒன்றாக தெரிய..
கரைமேல் நுரையாய் நான்
தினம் உடைய..
சருகாய் போனதை பூவாக்கப் பார்க்கிறாய்.
இருவேறு துருவத்தை இணையத்தான் கேட்கிறாய்.
வேண்டாம்..வேண்டாம் அன்பே..
நீ விடாதே என்மேல் அம்பே..

எழுதியவர் : கு.தமயந்தி (25-Jun-17, 12:23 pm)
பார்வை : 90

மேலே