புரியா மொழி

எங்கிருந்தோ அந்த குரல் வந்து இனிமையாய் இதயத்தில் ஒரு இதம் தந்தது, உருவம் தெரியாமலே!...

ஒருவேளை அக்குரல்
கனவாய் இருக்குமோ, என்று தோன்றிட
என்னை நானே கிள்ளி பார்த்துக் கொண்டேன்...

ஆஆ!
வலிக்கிறது...

அக்குரல் உண்மை தான்...
ஏதோ சொல்லிக் கொண்டே இருக்கிறது,
புரியாத மொழியில்...

கண்களை மூடினேன்...
புரிந்துகொள்ள முயற்சித்தேன்...
மனக்கண்ணில் மெல்ல மெல்ல அந்த உருவம் தெரியவந்தது, தெளிவில்லாமல்...

வான நிலவின் சிரிப்போசையோ?
சூரியனாய் பிரகாசிக்க காணக் கண் கூசிற்று...

" யார் நீ? என்ன பிதற்றுகிறாய் அர்த்தம் புரியா மொழியில்? ", என்றிவன் மொழிந்திட,
சிரிப்போசை நின்றுவிட்டது,
உருவம் காற்றிலே கரைந்து நகர்ந்து எனது மூக்கு வழியே உள்நுழைந்திட்டது...

நுரையீரல் நிறைந்தது இரத்தத்திலே கலந்து உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் சென்று ஆக்கிரமித்தது மூளையைக் கூட மிச்சம் வைக்காமல்...

சிறிது சிறிதாக அக்குரல் புரிய ஆரம்பித்தது, " நான் உன்னுள் கலந்திருக்கிறேன். உன்னைக் காண வரும் வரை காத்திரு. ", என்ற விதமாய்...

இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது,
ஓயாத கானமாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Jun-17, 5:24 pm)
Tanglish : puriyaa mozhi
பார்வை : 578

மேலே