நீளாதா இந்நெடு இரவு

தீராது தூரும் சாரல் மழை
ஒற்றை காலில் அசைந்தாடும் தென்னை
முகிலிடையே மறையும் நீள்தொடர் மலை
விடிந்தும் தூங்கும் ஆதவன் வானம்
மயிர்கள் சிலிர்க்கும் கூரிய குளிர்
ஒளியும் ஒலியும் ஒழிந்தொரு வேளை
கிறக்கம் செய்யும் நின் வியர்வைநெடி
நில்லாமல் நீளாதா இந்நெடு இரவு
$வினோ...

எழுதியவர் : (28-Jun-17, 11:21 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 89

மேலே