சித்தனும், பித்தனும்

#சித்தனும், #பித்தனும்...

ஏழ்மை பலரைச் சித்தனாக்கி விடுகிறதோடு அல்லாமல் கர்மயோகியாகவும் மாற்றிவிடுகிறது பலனை எதிர்பாராது கிடைத்ததைக் கொண்டு உண்டு, அதற்கு அதிகமாகவே தனது உழைப்பைத் தானம் வழங்க...

செல்வம் பலரை பித்தனாக்கி விடுவதோடு அல்லாமல், எப்படி இன்னும் தனது செல்வத்தை மேலும் பெருக்குவதென்று சிந்தித்து, மற்றவர் உழைப்பைத் திருடி, ஞானமற்ற குருடனாய் வாழ்கிறது கழுகைப் போல...

" என்னிடம் செல்வம் இருக்கிறது. ஆனால், எனக்கு அதன் மேல் மோகம் இல்லை. ", என்று வாழ்ந்து காட்டுபவர்களுக்கு இவ்வுலகிலே ஏற்பட்டுவிட்டது பஞ்சம்...

" என்னிடம் ஏதும் இல்லை. இந்த வயிற்றைக் கழுவ உழைக்கிறேன். அந்த கூலி கிடைத்தால் போதும். ", என்று வாழ்பவர் கணக்கையெடுத்தால்,
இவ்வுலகில் இல்லை பஞ்சம்...

உள்ளுக்குள்ளே ஊற்றெடுக்கும் ஆடம்பரத்தின் ஆசை..
அது என்றென்றும் நிறைவேறாது என்று ஒலிக்கும் அனுபவ மணியோசை...

செல்வத்தை நாடிப் பயனென்ன?
என்று நாளும் ஏதோ புலம்பித் திரிகிறேன் நான் யாரென்ற உண்மை நிலையறியாது...

தேடல் பணமென்றால் எளிது இவ்வுலகில்.
தேடல் சுகமென்றால் மிக எளிது இவ்வுலகில்.
ஆனால்,
தேடல் நித்தியமாய் நிலைத்திருப்பதென்றால்???...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Jun-17, 11:00 pm)
பார்வை : 432

மேலே