ஆண்களின் கல்யாண கவலை
![](https://eluthu.com/images/loading.gif)
[] ஆண்களின் கல்யாண கவலை ...
----------------------------------------------------------------------------
திமிரி நிற்க்கும் மீசை !
இது இளமையின் -
நியாயமான ஆசை !
இருவரிடம் எடுத்துரைக்க
இருவருடம் முயற்ச்சி செய்தும்
இயல்பாய் வரவில்லை பாஷை !
தாடை வரை தயக்கம் - வார்த்தை
வந்து வந்து தடுக்கும் !
மேடை காணும் வரைக்கும்
இக்குழப்பம் நெஞ்சில் நிலைக்கும் !
இரவு துயில் கலைக்கும் - மனம்
துறவு போல நினைக்கும் !
இளமை தீயில் வெடிக்கும் - இருந்தும்
நல்லவன் போல் நடிக்கும் !
ஏறு வரிசையில் அகவை
இறங்கு வரிசையில் இளமை
இந்நூற்றாண்டு ஆணுக்கு
இது தான் இங்கே நிலமை !
பொறுப்பாய் இல்லாத
அக்கால ஆணுக்கெல்லாம்
சிறப்பாய் நடந்ததே
சிறு வயதில் அன்று !
வெறுப்பாய் இருக்கிறது
இக்கால இளைஞனுக்கு
பொறுப்பாய் இருந்தும்
புண்ணியம் இல்லை என்று !
பேசாமல் கொல்லும் பெற்றோர் !
பேசியே கொல்லும் மற்றோர் !
கேள்வியில் கொல்லும் பணியிடம் !
எப்போது செல்வேன் சுயம்வரம் -
என்று உள்ளுக்குள் கேள்வி ஒருபுறம் !
சீறி எழவும் முடியாமல்
கூறி அழவும் முடியாமல்
தனி மீனாக பணிந்து கிடக்கிறான்
ஒரு நாகரீக தொட்டிக்குள்ளே ..!
நாளாக நாளாக மோகத்தின் ஏக்கம் !
வற்றாமல் வளர்கிறது சோகத்தின் வீக்கம் !
நண்பனிடம் மட்டுமே
கல்யாண கவலை சொல்லி
பகிர முடிகிறது ( இல்லை )
புலம்ப முடிகிறது !
நிறை குடங்கள் கூட
இந்த விசயத்தில் -
நிதானிக்க முடியாமல்
தழும்பி விடுகிறது !
இருபத்து ஐந்தில் -
அவனுக்கே தெரியும்
இது நடக்காது என்று !
இருபத்து ஏழு -
இதில் நிறைய பேர்
எதிர்பார்ப்பதுண்டு !
இருபத்து ஒன்பதில் -
நிச்சயமாக திருமணம்
நடக்குமென்று நம்புகிறான் !
நிச்சயம் கூட நடக்காமல்
முடிவாய் அவன்
முப்பதுகளை தாண்டி நகருகிறான் !
யாழ் ..