சண்டைக்காரி

சனிக்கிழமை இன்று !
என்னுடன்
சண்டைப்போட சண்டைக்காரியே
நீ !
இல்லை இன்று என்னுடன்!

சில நாட்களாய்
நாம்
பேசாமல் சண்டையிட்டோம்!

பல நாட்கள்
பேசியே சண்டையிட்டோம்!

சில முறை கை நீட்டியும் சண்டையிட்டோம்!

இன்று
சண்டையிட
என்னுடன் சண்டைக்காரியேஉன் போல் யாரும் இல்லை!

பேசாமல் சண்டையிட்டது போதும்!
பேசி சண்டையிட ஆசையாய் உள்ளது!

உன் மீது எனக்கு
பாசமெல்லாம் இல்லை!
உன்னிடம் சண்டையிட்டால் ஆனந்தமாய் உள்ளது!

ஊர் சுற்றிய பயணம் முடித்து!
சீக்கிரம் வா!
சண்டைக்காரியே
சண்டையிட என்னுடன்!

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை - 603001
01/07/17

எழுதியவர் : கவிக்குயவன் (1-Jul-17, 5:05 pm)
பார்வை : 4089

மேலே