உன் இதய அகராதியில் நான்

பெண்ணே இமைக்கும் பொழுதில் உன்
இதய அகராதியில் நுழைந்தேன்
உன்தன் சிறிய ஆசைகளை நான்
ஆணாக சிறப்பிக்கையில்

நீ திட்டுவதை குறைக்கச் சொன்னாய்
நான் அன்பாக அரவணைத்தே - என்
முத்தங்களை மொத்தமாக தந்தேன்
உன் ஆயுள் முழுவதையும்
எனக்காக அர்பணித்தாய்

உன்னோடு நான் மனம்விட்டுப் பேசும்
நேரங்கள் போதாதென்றாய்
வேலைக்கும் விடுமுறை போட்டு உன்
சமையலுக்கு ஒத்தாசையாக இருந்தேன்
அறியாத மழலையின் மகிழ்வினைக் கொடுத்தாய்

உன் தவறுகளை விட்டுக்கொடுக்கா
மற்றவர்களிடம் விவாதத்தில் வென்று
தூங்கும் முன் உன் கரம் கோர்த்து
அதனை சுட்டிக்காட்டினேன்
என்னை அணைத்தாய் தவறை வெறுத்தாய்

காரம் கூடினாலும் உப்பு மிகைத்தாலும்
உனக்காக சுவைப்பேன்
உன் சமையலை புகழ்வேன்
நீயும் சாப்பிட்ட பின் உணர்வாய்
என் இரக்கப் பொய்களை
இதன் முடிவும் அமையும் உன்
முயற்சியில் சமையல் சுவை மாற்றம்

உன் சுதந்திர சிறகை உடைக்காது பறக்கவிட்டே
உன்னை அடக்கி ஆழ்ந்தேன்
சிற்பிக்குள் இருக்கும் முத்தைப் போல்
என் வாழ்க்கையில் ஜொலித்தாய்

பெண்ணே உன்னோடு பிரியமாய்
தினமும் பயணித்தேன்
நீ தண்டவாளமாக தாங்கிக் கொண்டாய்
என்னை தடம் பிரளா

உன்னை பெற்றவர்களை என்
பெற்றோர்களாக பார்த்தேன் உன்
இதய அகராதியில் பார்க்கும் பக்கமெல்லாம்
நானாகவே நிரந்தரமாய் இருந்தேன்

எழுதியவர் : பயாஸ் அஹமட் (1-Jul-17, 12:47 pm)
சேர்த்தது : பயாஸ் அஹமட்
பார்வை : 89

மேலே