அரசியல் கணக்கு
[] அரசியல் கணக்கு ...
------------------------------------------------------------
கொள்கைகள் பிடித்தது
கட்சியில் இணைந்தோம் ..
கொள்கைக்கு உண்மையாய்
கட்சி இல்லாத போதும்
கட்சிக்கு உண்மையாய்
தொண்டனாய் தொடர்ந்தோம் ..!
கொள்கைகள் பிடித்தது
தலைவராய் ஏற்றோம் ...
கொள்கையை மறந்து
தலைவர் வளர்ந்தார்
தான் மட்டுமே வளர்ந்தவரை
நாம் இன்னும் மறக்கவில்லை ..!
பேச்சு திறனை
ஆட்சி தகுதி ஆக்கினோம் ..
பேச்சில் இருந்தது
ஆட்சியில் இல்லை - ஆனாலும்
அடுத்த மேடைக்கு ஆள் சேர்ந்தோம் ..!
மதிக்காதவரை மதித்து
பழகிபோன நமக்கு ..
மதிப்பிற்குரிய தலைமை
கிடைக்காது என்பதே கணக்கு ..!
-யாழ் ..