திருப்பு முனை
திருப்புமுனையை நீ வந்தே
மானுட வாழ்வில் இன்பமும்
துன்பமும் கொடுக்கிறாய்
கதைக்கும் சுவை கொடுத்து
சரித்திரத்துக்கும் துணை நிற்கும்
திருப்பு முனை வாழ்வின்
இயல்புகளை திருப்புகின்றது
நவீன உலகில் புரட்சி செய்யும்
உனக்கு ஏழை படும் பாடுதான்
புரியாமல் போனது ஏன்?
மனம் உடைந்து வாழ்க்கையில்
வெறுப்பு கொண்டு நிற்கும் மானுடனுக்கு
சங்கடங்கள் கொடுக்காமல்
அனுகூலம்மான திருப்புமுனையை
கொடுத்தால் அவன் சோகம் தன்னை
விலக்கி உன் மீது காதல் கொள்வான்
தாழ்வு உயர்வை உண்டாகும் திருப்புமுனை
நேர்மையாக போராடும் இனத்துக்கு
மட்டும் ஏன் இன்னும் திருப்புமுனை
செய்தி சொல்லவில்லை