மாறுபட்ட பூமியாகுது தேசமும்
ஊர்ப்பக்கம் சென்றேன்
உல்லாசப்பயணம் அல்ல
உள்ள நிலவரம் அறியவே ...
கூரைவீடுகள் மாடிகளாய்
கூடியிருந்தது குடியிருப்புகள்
கூடுதலாய் வாகனங்கள் ...
மாறியிருந்தது ஊரும் நகரமாய்
மாற்றமும் தெரிந்தது மக்களிடம்
மாறிப்போனது மண் வாசனையும் ...
பேச்சு வழக்கிலும் மாற்றம்
பேசும் பொருளிலும் காட்டம்
பேச்சில் உரிமை நிலைநாட்டம் ...
செயலில் மாற்றத்தின் சாயல்
செயலோ சுனாமியின் வேகம்
செயல்களில் மாறாத ஒற்றுமை ...
மாறுதலின் ஆரம்பம் மனங்கள்
மாந்தரின் புரிதலும் அடித்தளம்
மாறுபட்ட பூமியாகுது தேசமும் ...
பழனி குமார்