குழந்தையின் கண்ணீர்

" அப்பா அடிச்சா அம்மா கிட்ட சொல்லி அழலாம்.
அம்மா அடிச்சா அப்பா கிட்ட சொல்லி அழலாம்.
அம்மா, அப்பா இரண்டு பேரும் அடிச்சா யாருக்கிட்ட சொல்லி அழுவேன்?. ", என்று மூன்று வயது குழந்தையின் கண்ணீர் கேட்டது...

விடை தெரியாது விசும்பி நானும் அழ, என் கண்களும் குளமாயின...

ஆறாம் வயதில் பள்ளி சென்றேன்.
பத்தாம் வயது வரை நானும் முட்டாள் குழந்தையாகத் தான் இருந்தேன்..
ஆறாம் அறிவு விழித்தெழ அன்பாய் அரவணைத்த உள்ளூர் பள்ளிக்கூட ஆசிரியர்களை என்றும் மறவேன்...
மகனை அடக்கி வளர்க்கும் தந்தைகளுக்கு மத்தியில் எனது தந்தை எனக்கு சுதந்திரம் தந்தார்..
ஏழையாக இருந்தாலும் நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தார்..

அம்மாவின் அன்பு கிட்டாமல் வாடிய போதெல்லாம் தாத்தாவும், பாட்டியும் அன்பாய் கவனித்துக் கொண்டார்கள்...

முடியுமென்ற தன்னம்பிக்கையும்,
சிறுவயதில் மனதிலூன்றிய பழைய பகுத்தறிவு பாடல்களும் என்னை நல்வழிப்படுத்தின...

அந்தக் குழந்தையும் கண்ணீரும், அதன் பெற்றோரின் உணர்வும் என்னை மாறி மாறி நிலைகுலைய வைக்க,
என்னால் இயன்றளவுக்கு அந்தக் குழந்தைக்கு அன்போடு கதைகள் பல சொல்லி ஆறுதல் தர எண்ணியுள்ளேன்.
இத்தூய நோக்கம் நல்லபடியாக அமைவது இறைவனின் சித்தம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Jul-17, 12:12 am)
பார்வை : 2243

மேலே