மதங்களுக்குள் சிறைப்பட்டவனா கடவுள்

சகலத்திலும் சகலமாய் நிறைந்த இறைவன் தம்தம் மதத்துள் கட்டூண்டு கிடக்கிறார் மனித மனங்களாலே..

வழிவழியாய் பாடிவைத்த மரபும்,
எழுதிவைத்த எழுத்தும் இறைவனைக் கூறுபோட, மூடநம்பிக்கையென்னும் பிணியில் அகப்பட்டு,
அப்பிணி தீர அன்பென்னும் அருமருந்தை மறந்து வாழும் உலக மாந்தர்களே,
கருணைக்கடலுக்குப் பிரிவேது?

கடல்சூழ் நிலத்தில் விலங்குளிலும் கடையினமாய் வாழ்ந்துக் கொண்டு,
பகுத்தறிவின் மகத்துவம் உணராது மனிதரை மனிதரே பழித்து, பழிதீர்த்து, பாவம், புண்ணியமென பசப்பும் காட்டிக்கொண்டு, உலகைத் தனது கைக்குள் அடக்க, பணமென்னும் அதிகாரத்தை ஏவி,
உலக ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் சதிகள் அரங்கக் காண்கிறேன் மெல்ல, மெல்ல..

கிறிஸ்துவர்களும், இந்துகளும் முகமதியர்களைத் தீவிரவாதிகளென்று அழிக்க எண்ணுவதும்,
முகமதியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை, வாழும் உரிமைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்துவதும், இப்படியாக பல மதங்களுக்கிடையேயான போட்டியின் அடையாளங்கள் உலக அரசியலில் எதிரொளிக்கிறது போர் முரசின் வாயிலாக..

பயங்கர ஆயுதங் கொண்டு நேர்படுபவனிடமிருந்து தன்னைப் பாதுகாக்க கொலையும் செய்கிறது பயங்கொண்டு..

அன்பை ஆயுதமாக்கினால் அன்பே பாதுகாக்கிறது தூரோகிகள் நெருங்காத வரை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Jul-17, 7:46 pm)
பார்வை : 605

மேலே