பூ உலகம்

பூ உலகம்

பூக்களின் உலகத்திலே பூவாகி நிற்கின்றேன் !
பாக்களும் வனைகின்றேன் பரவசமாய் உணர்கின்றேன் !
தாக்கமும் ஏதுமின்றி தரமான தோட்டத்திலே !
காக்கவும் வேண்டாமே கற்பனையால் நிறைகிறதே !
ஊக்கமாய்ப் பேசிடுமே ஊருணியின் கரைதனிலே !
தேக்கமும் இல்லையன்றோ தேவதையும் பூவன்றோ !
யாக்கைக்கும் மருந்தாகும் யாங்கணுமே மணத்தாலே !
தூக்கத்தை விடுத்திடுவோம் துயிலெழுவோம் அதிகாலை !

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Jul-17, 6:33 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 116

மேலே