கடவுள் நம்பிக்கை
பாலக பருவத்தே
பாட்டனும் பாட்டியும்
கைப்பிடித்து காட்டிதந்த
கடவுள் நம்பிக்கை
தசையோடு சேர்ந்து
தானும் வளர்ந்தது
கண்முடி கைக்கூப்பி
அமர்ந்த வேளையில்
எதை வேண்டினாய்
என்ற கேள்வி
எழுந்தது
பணம் வேண்டு,
பொருள் வேண்டு,
சுகம் வேண்டு,
புகழ் வேண்டு,
என ஓதப்பட்டது
மனணம் செய்தது
மந்திரமாக, அமைதி
குலைந்தது, அதுவே
சடங்கானது
காட்டித்தந்தவர் கற்றுத்தரவில்லை,
கபடம்மென்று கடிந்த
பெரியாரோ முழுதும்
களையெடுக்கவில்லை
கண்ணற்றோர் கண்ட
களிறாய் கடந்துள்ளோம்
இன்றுவரையில்