தந்தையர் தினம்
"இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் அப்பா!! ".....
மகன் சொன்னான்...
"மிக்க நன்றி தம்பி!! " ....
தந்தை மொழிந்தார்....
"யார் அலைபேசியில்?"....என்று சிலர் கேட்டதற்கு .....
"என் மகன்"....என்று தந்தை
வெளியே பெருமையோடும்
உள்ளே வெறுமையோடும் கூற
இருபக்க இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன....
ஒருபக்கம் தந்தையால் கட்டிவிடப்பட்டு மகன் வாழும் இல்லத்திலும்......
மறுபக்கம் மகனால் கைவிடப்பட்டுத் தந்தை வாழும் (முதியோர்) இல்லத்திலும்.....