ஒலைச்சுவடி முதல்
நற்குணங்கள் நான்கு சொல்ல -
நாதியில்லை கேட்பதற்கு !
காலஓட்டம் நிற்பதில்லை -
கடமை கூட செய்வதில்லை !
அவசரம் என்று சொல்லி -
அடிமாடாய் அலையிறதும் !
ஆறுதல் இல்லையென்று -
ஆற்றாமையில் கிடப்பதும் ஏன் ?
பன்னெடுங் காலமாய் பாதுகாத்த பொக்கிஷம் !
ஆண்டி முதல் அரசன் வரை எழுதி வைத்ததெல்லாமே ;
"ஓலைச்சுவடி" மட்டுமின்றி -
வெஏறெதுவும் கண்டதுண்டோ ?
ஓலைச்சுவடி வார்த்தையை -
ஒருமுறையேனும் படித்துப்பார் !
எழுத்து மட்டும் பழசுதான் !
எண்ணம்மெல்லாம் புதுசுதான் !