முட்கள்

முட்கள்

முட்களையும் நேசிப்பேன் ! முத்தமிடுவேன் !
கடலலையோடு கானம் பாடுவேன் !
மலைமுகடும் நிலவோடு கதை பேசும் !
முட்கள் இல்லா மலர்கள் வேலியிலா வெறுமைகள் !
மானம் காக்க முட்களைத் தேடும் தேவதைகள் !


கண்களில் நீர் மறைக்க
காலத்தை நொந்து கொள்ள
ஏனோ என் மனம் ஓயவில்லை .
மண்ணில் வியர்வை
மனத்தில் குடும்ப பாரம் !
எண்ணியெண்ணிச்
சுமைதாங்கியாய் இன்று முட்களாய் !!!


கலங்கி நின்றால்
காரியம் நடக்குமா ?
விலகியும் போனால்
வீரமாய் இருக்குமா ?
விதியின் வழியே செல்லும்
நம்மின் வாழ்க்கை ....
விதியால் அன்றோ முடிகிறது !!!


முட்களில்லாப் பூக்கள் !
முள்ளில்லாத பூக்கள் அழகா !
முட்கள் இருப்பதால் கள்ளியும்
நெருஞ்சியும் ரோசாவும்
அழகில்லையா ! முட்கள்
இல்லை ; குத்த விரும்பாது
தம்மையே ரணமாக்கிக் கொள்ளும்
தன்னலமற்ற பூக்கள் இவர்கள் !!



நெற்றியின் வியர்வை நீளும் நாளே
வெற்றியின் வழியிலே
செல்லுதல் உண்மை , நெருஞ்சியின்
முள்ளும் ரோசாவின் முள்ளும்
பாதுகாப்பு அரணாய் இருக்க
இவர்களோ முட்கள் இல்லாத
பூக்களாய் எவர் வேண்டுமானாலும்
பறிக்கும் வேலியில்லாப் பரிதாபம் !
மாறுதல் தேடும் மங்கையர் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு . 323 )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Jul-17, 1:23 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : mutkal
பார்வை : 104

மேலே