போராட்டமே வாழ்க்கை
போராட்டமே வாழ்க்கை
தரையிலும் கண்ணீர் தண்ணீரிலும் கண்ணீர்
கரையிலும் கதறல் காலத்தின் கொடுமை .
திரையிட்டு மறைக்க திடமுமே இல்லை .
உரைத்திட நாவினில் உமிழ்நீர் இல்லை .
வரையறை இல்லா வாழ்க்கையில் போராட்டம் .
கரைசேர வழியில்லை கடலன்னை மூழ்கடிக்க !
பரதவர் வாழ்வோ படகினுள் அடங்கும் .
முறையின்றிச் சுழலும் முற்றிலும் வேதனை !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்