கதிராமங்கலம் காப்போம் விழித்தெழு தமிழா
பகடைக்காயாய் உருளும் பாமரன் ஓர்நாள் கொடுமைதாளாது
விடுதலைகாண வீருகொண்டு எழுந்திட்டால் தாங்கிடுமா தமிழகம்..?
ஆடுபுலியாட்டம் நீங்கள்காட்டி அரசவையைதான் அலங்கரிக்க முடியும்
புலிகளின் நடமாட்டம் புவிதனில் ஏராளம் அறிவுதுறந்தால் அன்றே புதையநேரிடும்...
ஆலவிழுதென அடக்கி அழித்துவிட நினைத்தாயோ
மீளாதுயரை மீண்டும்தர மிகையாசை கொண்டாயோ...!
கோலமயிலும் கோபம்கொள்ளும் கோமகன் எவராயினும்
பாலைநிலமும் பாதாளம்காட்டும் பட்டம்வென்ற பண்பாளராயினும்...
நெற்கதிர் நிழலாடிய கதிராமங்கலம் காட்சிப்பிழையாகி காணாதுபோனால்
கற்காலம் காட்டிய தேசிய வரைபடத்தில் இனி தமிழகம்மட்டும் தனித்தன்மை பெறும்...