காதல் நம் வசம் ஆனது
தூரத்து மின்னல்
கண்களை துளைத்து
நுழைந்த நொடிப்பொழுது போல ...
இமைகளை திறந்து
இதயத்தில் இறங்கினாய் ...
காதல் இருக்கையில் அமர்ந்து
கள்வனேயே கொள்ளையிட்டாய் ...
போவென்று சொல்ல
குரல் வரவில்லை ...
ஏன் என்று கேட்க
இதழ் எழவில்லை ...
இவன் இதயம்
உன் வசம் ஆனது ...
இனி உயிர்க்காதல்
நம் வசம் ஆனது ...