நினைவுப் பூக்கள்
உன் நினைவுகளில்
புதைந்து
கிடப்பதிலேயே
என் நேரம்
கரைகிறது.
நான் வெட்டியாய்
இருப்பதைக் கண்டு
வேலைகள் என்னை
கேலி செய்கின்றன.
இதயத்தின் துடிப்பாய்
நீ இருப்பதால்
இளமையில் புதுமையை
புகுத்துகிறாய்.
விழித்ததும்
புதியதோர் காலையை
உணர்கிறேன்.
பூக்களின்
வாசனையை நுகர்கிறேன்.
வீறுநடை கொள்ளச்
செய்கிறது
இந்த காதல்
ஒரு ஏகாந்தத்திலே
மூழ்கச் செய்கிறது.
என் நினைவு நூலில்
உன்
குறும்புத் தனங்களை
மலர்களாய் கோர்த்து
வைத்திருக்கிறேன்
மாலையிட.