காகம்

இரும்பு மனக்கதவை
இரக்கமற்று அடைத்த
வீட்டு வாடகைக்காரன்
விரட்டியடித்த நாளில்
அடைக்கலம் தந்த மரத்தடியில்
அண்ணாந்துபார்த்தபோது
சொந்த வீடு வாங்க
அத்திவாரம் போட்டுக்கொடுத்தது
உச்சிக்கிளையில்
கூடுகட்டிக்கொண்டிருந்த காகம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Jul-17, 2:38 am)
Tanglish : kagam
பார்வை : 140

மேலே