எம்மருங்கும் இயற்கையன்னை
அந்திமாலை மயக்கத்திலே ஆதவனின் சீற்றங்கள்
வெந்தழல் தணிந்து வெய்யோனும் நோக்கக்
பந்தங்கள் தேடியே பாட பாசமொடு கரைகாண
தந்திடுமே வாழ்வினிலே தழைக்கட்டும் இன்பங்கள் .
வந்திடுமே செல்வங்கள் வாசமான நிலத்திலே .
சொந்தங்கள் கூடிடுவார் சோகங்கள் மாறிவிடும் .
இந்தநாளில் இலக்கையும் இடைவிடாது அடைந்திடவே
உந்துகின்றான் துடிப்பினையும் உறவுகளைக் கண்டிடவே .
எந்தநாளும் துணையாகும் எம்மருங்கும் இயற்கையன்னை !
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்