கவிஞரின் நினைவாய்

இலங்கை யாழ்ப்பானம் மாவட்டம் குன்னாகம் என்ற ஊரில் ஒரு இளைஞன் தேநீர் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கிறார் ,அந்த கடையின் வானொலியில்
் " அன்னையைப்போல் ஒரு தெயவம் இல்லை ,அவர் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை மனிதரில்லை என்ற கவி ஒலிக்கிறது.

இதைக்கேட்ட இளைஞன் நான் சேரக்கூடாதா நால்வரோடு சேர்ந்து என் தாயிக்கு துன்பம் தந்துவிட்டேன் .இதோ இந்த கவி என்னை மாற்றி விட்டது ,உங்களுக்கு நன்றி என் தவறை இந்த கவியின் மூலம் உணர்ந்து விட்டேன் என்று சொல்ல்வும். தேநீர் கடைக்காரர் நீ நன்றி சொல்லவேண்டியது எனக்கில்லை இந்த கவியை எழுதிய கவிஞர் கா.மு.ஷெரிப் என்ற தமிழ்நாட்டு கவிஞருத்தான் என்கிறார்.

இவர் எழுதிய சாகா வரம் பெற்ற மற்ற பாடல்கள்.

சிட்டு குருவி சிட்டு குருவி சேதி தெரியுமா ....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா....
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே ...
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக்கண்டேன் .,..
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் .....
ஏரிக்கறையின் மீது போரவளே பெண் மயிலே நில்லு கொஞ்சம் நானும் வாரேன் ....
ஒன்று சேர்ந்தால் அன்பு மாறுமா உண்மை காதல் மாறி போகுமா....
பொன்னான வாழ்வு மண்ணாகி ...

உழவும் தென்றல் காற்றினிலே ...

போன்ற சாகாவரம் பெற்ற பாடல்கள் எழுதி திரைக்கு ஆபாச பாடல்கள் எழுத மாட்டேன் என்ற வைராகியத்துடன் திகழ்ந்த

கவி .கா.மு. ஷெரிப் அவர்களின் நினைவு தினம் இன்று.

எழுதியவர் : முகநூல் (7-Jul-17, 4:04 pm)
Tanglish : kavignarin ninaivay
பார்வை : 373

மேலே