என்னுயிர் தோழி

உன்உயிராய் நானிருக்க,
உன்நலன் விரும்பிகளுக்கு பயம் ஏன்?
என்உயிராய் நீயிருக்க,
என்நலன் மீது எனக்கு அக்கறை ஏன்?
.
தோழியே!!
தோள்மீது கைப்போட்டு,
தோழமையாய் நடைப்போட்டு,
சுற்றியிருக்கும் குருடர்கள் பார்க்க,
சுதந்திர பறவையாய் சுற்றுவோம்……..
.
தேயாத மதியே!!
மதி கொண்டு,
தற்காலிக குருடனை,
மாற்றுவோம்…………
விதி என்று ,
பிறவி குருடனுக்காக இறைவனிடம்,
வேண்டுவோம்……………

எழுதியவர் : வாசு செ.நா (9-Jul-17, 11:17 am)
பார்வை : 1194

மேலே