நட்பிற்கு வாழ்த்துக்கவி - 3
மது ஒழிக்கப் போராடிய
திரு தனவேல் சட்டப்பேரவை
உறுப்பினர் அவர்களுக்கு
வாழ்த்துக்கவி
தனவேல்
இவன் பாகூரின் பாகுபலி
பாமரன் வளரப் பாடுபடும் பாட்டாளி
இவன்
மதுக்கடைகளை சுட்டெரிக்கப் பிறந்த நெருப்பு
இவனுக்கு மட்டும்தான் உள்ளது
மதுவினால் மக்கள் அழியக்கூடாதெனும் பொருப்பு
இவன் ஏழை மக்களின் துருப்பு
உதவிக்குச் சொல்வதில்லை மறுப்பு
புதுவைக்குப் பெருமை இவன் பிறப்பு
இதுவே இவன் தனிச்சிறப்பு
இவன் N . R எனும் சூரியனிடமிருந்துத்
தெறித்தத் துகள்
இவன் எந்நாளும் ஏழை வீட்டில்
ஏற்றிவைத்த அகல்
இவன் பாகூர் மக்களுக்கு கிடைத்தப் பகல்
கற்காலக் கர்ணனின் தற்கால நகல்
இவன்
சட்ட சபையின் சட்டையைப்
பிடித்து உலுக்கியவன்
மக்களைக்காக்க மதுக்கடையின்
அஸ்திவாரத்தைக் குலுக்கியவன்
ஏழைக்குத் தனத்தைத்
தருவதால் இவன் தனவேல்
அதை தானமாய்த் தருவதால்
இவன் தானவேல்
தன் இனத்திற்கு உழைப்பதில்
இவன் இனவேல்
நல்ல குணம் கொண்டதால்
இவன் குணவேல்
பணம் படைத்திருப்பதால்
இவன் பணவேல்
கனத்த இதயத்தால்
இவன் கனவேல்
ஜனங்களைக் கவர்ந்த
இவன் ஜனவேல்
அவர் மனதில் இடம்பிடித்த
இவன் மனவேல்
தன் இனத்தின் வளர்ச்சிக்கு
உழைப்பதில் தன்மானவேல்
பிறக்கட்டும் இவனால் மாற்றம் இனி
சிறக்கட்டும் இவன் மக்கள் பணி