நண்பன், நட்பு
உடன் பிறப்புகள் விட்டுக்கொடுக்காமல் போகலாம்
கட்டிய மனைவி கூட செவி மடுக்காமல் போகலாம்
பெற்ற பிள்ளைகள் கூட கைவிட்டு விடலாம் -ஆனால்
உற்ற நண்பன் அவன் ஒரு போதும் உன்னை
கை விடமாட்டான் ஒரு போதும் -நீ தவறுகள் செய்ய
நினைத்தபோதும் ,அவனுக்கு உன்னை நல்லவனாய்
பார்ப்பதில்தான் பேரானந்தம் உன்னை கடைத்தேத்துபவன்
அவன் நட்பு மாலின் சக்கரம் போல் உன்னை
காத்து நிற்கும்.