நட்புடன் ஒரு நாள்

ஒரு நிமிட சந்திப்பில்
உருவான ஓருறவு .....

பல பயணத்தின் முடிவில்
முடியாத சில உரையாடல்கள் ...
பசிக்காத வேளையும்
உன் ருசிக்காக -நான்
புசித்த உணவுகள் ....
நீ வேண்டிய
புகைப்படங்கள் -பல,
புதையலாய் கிடைத்த
வேடிக்கைகள் !!

என் உளறல்களை
உறங்காமல் கேட்கும்
உன்னதமானவன்
அதிகம் பேசியதும் உன்னுடன்தான்
அதிக நேரமில்லாததும் உன்னுடன்தான்
அதிக அன்பும் உன்னுடன்தான்

கரையும் காலம்
வரையும் மாற்றம் -அதில்
மறையா உன்னை !
என்சொல்லி வாழ்த்துவேன்!...

என்னை ரசிக்கும் உனக்கு
உன்னை ரசிக்க ஓர் வாய்ப்பு ....

எழுதியவர் : மதி (7-Jul-17, 12:19 am)
Tanglish : natbudan oru naal
பார்வை : 1075

மேலே