கனவு நனவாகும்

கனவு நனவாகும் காத்திரு -மானுட
மனதில் ஆசை துளிர் விடும் போதே
கனவும் பிறப்பு எடுக்கும்
கனவு பிறப்பு கொண்டாலே வெற்றிப்படியைத் தொட முடியும்

கனவும் நனவாகும் நம்பிக்கையோடு காத்திரு
கனவு காணவில்லை என்றால் நம்பிக்கை விதைகள் தான் முளை விடுமா ?
இன்றைய விதைகள் தான் எதிர்கால விருட்சம்
அது போலவே இன்றைய கனவே நாளைய விடியலை உருவாக்கும்
நம்பிக்கையோடு காத்திரு

உன் எண்ணங்கள் மீது கனவு இன்றி போனால்
உன் வாழ்வும் இருண்டு போகும் _மானுட
உன் சிந்தனை மீது கனவு காணு நாளை அது நனவாகும்

எழுதியவர் : கலையடி அகிலன் (8-Jul-17, 9:51 am)
பார்வை : 282

மேலே