உன்னை பார்க்கிறேன்
முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
பரவசமடைகிறேன்.....
இதயம் முதல் முதலாய் துடிப்பதாய் ஓர் உணர்வு
மனது உன்னிடம் சரணடைந்து விட்டது......
நீயே அறியாமல் என்னை உரசி செல்கிறாய்
மின்சாரம் பாய்கிறது உடலெங்கும்.....
இதயக்குமிழ் எரிகிறது காதல் ஒளியாய்...
மீண்டும் உன்னை பார்க்கிறேன்
நீ பார்க்க மாட்டாயா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும்
பார்க்கிறாய் நீ - என்னையல்ல - ஆனால்
என்னை பார்ப்பதாய் நினைத்து
என் மனது உன் பின்னே .......
உன் வீட்டு நாய் குட்டியாய்.......
NP பிரதாப்