உன் காதலே உயர்வானது

[] உன் காதலே உயர்வானது ...
----------------------------------------------------------------------------
உன் காதல் ஒரு நாவல் ..
சில பக்கங்களே
நான் வாசித்திருக்கிறேன் !
சில பக்கங்களே என்றாலும்
பல இன்பங்கள் அள்ளி தந்தாய் !
என் காதல் ஒரு சிறுகதை ..
ஆனால் நீயோ -
முழுவதும் முடித்துவிட்டு
திரும்பவும் படிக்கிறாய் !
அதுவே என்ற போதும்
அலுப்பேதுமின்றி
விரும்பியும் படிக்கிறாய் !
என்றாலும் கூட -
இன்பத்தில் உன் அளவில்
இரண்டில் ஒரு பங்கும்
உனக்கு தந்ததில்லை ..
ஆனாலும் பல மடங்கு
நீயாகவே இன்புறுகிறாய் !
யாரும் கேட்கலாம் ..
நாவல் முடிப்பதை விட
சிறுகதை முடிப்பது
எளிது தானே என்று ..!
ஆனால் அவர்களுக்கு தெரியாது
நீ படித்த நேரங்களில்
பல நாவல்கள் முடித்திருக்கலாம் என்று !
யாழ் ..