இது ரொம்ப ஓவர்

இது  ரொம்ப ஓவர்

டாண்:-
எனக்கு இப்போ புரிஞ்சி போச்சி நீ ஏன் என்னையும் அடிங்க டாண் சார்ன்னு வலியவந்து கேக்கிறேன்னு

கோழை :-
ஏன் டாண்சார்......?

டாண் :-
இவ்லோப்பெரிய டாண்.... போயும் போயும்... ஒரு இடி இடிச்சா மயங்கி விழுற பச்ச பயந்தாங்கொல்லிய அடி அடின்னு அடிக்கிறவனுக் கெல்லாம் பேரு டாணா.... இல்ல..... இந்த பயந்தாங் கொல்லியவிட பயந்தாங் கொல்லியாத்தான் இருப்பான்னு..... இந்த டவுனெல்லாம் பேசவச்சி என் பேரை டேமேஜ் பண்ணத்தானே நீ என்னையும் அடிங்கன்னு கேக்கிறே; இனிமே நீயே என்னை அடிச்சாக்கூட என் சுண்டிவிரலு உன் மேல படாது

கோழை :-
போங்க டாண் சார் சும்மா ஒரு பேச்சிக்குதானே சொல்றீங்க....!

டாண் :-
இல்ல இது ஓம்மேல சத்தியம்....!

கோழை :-
ம்....ம்.....நான் நம்பமாட்டேன் டாண்சார்....!

டாண் :-
அதோ அந்த ஆஞ்சினேயர் மேல சத்தியமா சொல்றேன்

கோழை :-
மனதுக்குள் ஒரு முனகல்..... இதுவரைக்கும் இந்த உலகம் என்னை பயந்தாங்கொல்லி, பயந்தாங்கொல்லின்னு, கோழைன்னும் ஏளணம் பண்ணுச்சி, எள்ளிநகையாடுச்சி இந்த உலகத்தை என்னைக்கண்டு பயந்து ஓட வைக்கிறேன் ....!

பக்கத்தில இருந்த ஹார்ட் ரீடர்:-
இது " ரொம்ப ஓவர்...!"


Close (X)

0 (0)
  

மேலே