நமக்கென ஒரு உலகம்

ஒரு சக்தி ஆண்மைக்கு
இரு சக்தி பெண்மைக்கு

ஒரு சக்தி பெண்மைக்கும்
ஒரு சக்தி தாய்மைக்கும்

இரு சக்தி இருந்தென்ன
ஆண்மையில் பெண்மை
அடங்கிடு மதர்க்காக
அடிமையென்றர்த்தமன்று

பெண்மை இல்லையேல்
ஆண்மைக்கே அர்த்தமில்லை

ஆண்மை இல்லையேல்
பெண்மைக்கே அர்த்தமில்லை

முதல் மனிதன் போலவே
முதல் மனுஷிப் போலவே
இருவர் மட்டும்
ஒன்றிணையாது
இருந்திருந்தால்
உலகம் உருவாகியதிலும் அர்த்தமில்லை

அதனால்தான் அவ்விருவருள்ளே
காதலெனும் உணர்வை ஊட்டினான்

இங்கே கல்யாணம் என்பது சம்பரதாயமே
அன்பு ஒன்றே அகிலத்தின் உயிர்நாடி

புரியாத உலகில் வேலையில்லை வாடி
நமக்கென ஒரு உலகை உருவாக்கலாம்
நம் இஷ்டம் போலே வாழ துவங்கலாம்

படைத்தவன் விருப்பப்படி ஒன்றிணைத்து காலத்தை கழிக்கலாம்

அஞ்சியஞ்சி வாழ்ந்த வாழ்வெல்லாம்
பஞ்சுப்பஞ்சாய் பறந்து போகலாம் இங்கே
மிஞ்சிமிஞ்சி மிஞ்சுதற்கு
ஒன்றுமில்லை

எழுதியவர் : Abraham Vailankanni (9-Jul-17, 2:38 pm)
பார்வை : 153

மேலே