வரம்

வரம் தந்தாய்
இறைவா...!!!
தினம் என்னவளைக்
காண வரம் தந்தாய்..
இன்பங்கள் கோடி
அள்ளித்தந்தாய்...
பசித்திருந்தவனுக்கு
முக்கனிகளும் தந்தாய்...

இன்னும் வேண்டும்!!!

மலர் மங்கையிவள்
மலர்ச்சுடிக் காணாவில்லை..
மஞ்சள் குங்குமம்
நெற்றியில் திகழ....
பின்னிய கூந்தலில்
மல்லிகை முடிந்து
பட்டு சரிகை
பாவாடை
தாவணியில் காணக்
கிடைக்கவில்லை....
நாணமே நாணி நிற்க
நான் கண்ட மங்கையிவள்
ஓயாரமாய் நடையிட
அண்ணமே வந்து நிற்கும்...
என் அவளிடம்
நடைபழக....

எழுதியவர் : கருப்பசாமி (9-Jul-17, 11:52 pm)
சேர்த்தது : கருப்பசாமி
Tanglish : varam
பார்வை : 92

மேலே