சேர்த்துவிடு என்னிடம்

ஆண்டவன்
படைத்த அழகுச்சிற்பமே
ஆண்டாண்டுகளாய்
மனதைக்களைத்தாய்.....
உன்னால் உறக்கம்
விட்டுப்போனதடி
பசி தாக உணர்வுமில்லையிடி...
பொன்னில் செய்த
பொற்ச்சிலையே....
உன்னால் கற்பாறையாய் நிற்கிறேன்......
பெயர் தெரியாத
உன்னையே
சுற்றித்திரியுதடி
மனசு.....
எங்கேனும் எனைக்
கண்டால் சேர்த்துவிடு
என்னிடம்...
உயிரே உயிரற்று
நடமாடும் எனக்கு
உயிர் பிச்சையிடு.....

எழுதியவர் : கருப்பசாமி (10-Jul-17, 12:00 am)
சேர்த்தது : கருப்பசாமி
Tanglish : serthuvidu ennidam
பார்வை : 86

மேலே