இராவணனின் வியூகம்
ஒரு இருட்டு அறையில் கைகள் கட்டி வாயில துணி வச்சி அடச்சி மயங்கி கிடந்தவ லேசா முழிச்சி பாத்தா நம்மள கடத்தினது யாரு ஏன் கடத்தி இங்க கொண்டு அடச்சிருக்கானுவனு கண்ணு அழுதுட்டு இருந்துச்சு மனசு கடத்தும் போது காப்பாத்தாம விட்டு ஓடுன காதலனை நினைச்சு அழுதுச்சு… திடீர்னு கதவு தொறந்துச்சு ஆறடி உயரத்துல ஒருதன் மூஞ்சில கருப்பு துணிய கட்டிக்கிட்டு நின்னான் நேரா அவ பக்கத்துல போயி அவள உத்து பாத்தான் அவளுக்கு என்ன செய்ய போறானானு பயத்து கட்டுன கையவும் காலயும் அசைச்சா அப்பதான் கவனிச்சா அவன் கையும் கயிறால கட்டிருந்துச்சு ஏன்னு யோசிக்கறதுக்குள்ள அஞ்சாறு பேரு வேகமா உள்ள வந்து அவ கை கால அவுத்துட்டு வாயில துணிய எடுத்த தன்னுடன் கல்லூரியில் படிக்கும் உபேந்திரா வை ஏறிட்டு பாத்த அவளை கவலப்படாத ஷாலினி பயப்படாத வா வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டு கூட வந்த பயலுவ கிட்ட சந்திரா இவனை போலிஸ் கிட்ட கொண்டு போங்கல ஷாலினி பேரு வராம பாத்துக்க வேற ஏதாவது திருட்டு கேச குடு… அவன் டேய் உபேந்திரா நீ அவள பத்திரமா கூட்டிட்டு போ இவன நான் பாத்துகிடுதேனு சொன்னான். ஷாலினி முன்னாடி போன உபேந்திராவை பின் தொடந்து அவன் பைக் பக்கத்துல போயி நின்னா அவன் பைக்ல ஏறு போலாம்னு சொன்னான் பைக்ல ஏறுனதும் கிளம்பியது போய்கிட்டு இருக்கும் போது அவன்கிட்ட மணி எத்தனனு கேட்டா 11.30 am சொன்னான் நான் எங்க வீட்ல காலேஜ் போறதா பொய் சொல்லிட்டு என் லவ்வரோட மொத தடவயா படத்துக்கு போலாம்னு போயிட்டு இருக்கும் போது மூன்று பேர் வந்து மறிச்சு அவன மிரட்டுனதும் என்னை விட்டு ஓடிட்டான் இவனப் போயி லவ் பண்ணிட்டோமேனு நினைக்க ஒருத்தன் ஓதோ மூஞ்சில அடிச்சான் அப்புறம் என்ன நடந்ததுனே தெரியல முழிக்கும் போது நீங்க வந்தீங்க ரொம்ப தேங்ஸ் என்றாள்.. என்னை கடத்துனது உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டா. நான் பைக்ல வரும் போது உன் லவ்வர பாத்தேன் அவன் தான் சொன்னான் உடனே என் ப்ரண்ட்ஸ்க்கு போன் பண்ணி வரச் சொல்லி இங்க வந்தேன் உன் லவ்வரயும் கூப்டேன் அவன் பயந்துகிட்டு வரல உடனே ஷாலினி அவன என் லவ்வர்னு சொல்லாதிங்கனு சொன்னா. வீட்ல இதப் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொன்னான். அவள் ஏரியா வந்ததும் இங்கே விடுங்க நான் நடந்து போறேன் யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்கனு சொன்னாள். பைக் நின்றது தேங்ஸ் சொல்லிவிட்டு நடந்தாள்.வீட்டுக்குள்ள போனதும் அம்மா ஏன்டி சீக்கிரம் வந்திட்டனு கேட்டா தல வலிமா னு சொல்லிட்டு தன் அறைக்குள் போயி பெட்ல படுத்தா கொஞ்ச நேரத்துல உறங்கிட்டா. மாலை 6 மணிக்கு போன் வந்தது புது நம்பர்ல இருந்து பயத்துடன் எடுத்தாள் நான் உபேந்திரா பேசுகிறேன் என்றான் நாளை கல்லூரியில் பேசலாம் பிரச்சனை ஏதும் இல்லை என்று சொல்லி விட்டு வைத்தாள். அன்றிலிருந்து ஷாலினி அவ லவ்வரிடமிருந்து ஒதுங்கி விட்டாள். சில மாதங்களில் உபேந்திரா ஷாலினி நட்பு காதலாக மாறியது. கல்லூரி இறுதியாண்டு முடியும் நேரம் காதல் லீலை ஷாலினி வீட்டிற்கு தெரியவர உபேந்திரா வை சந்திப்பதற்காக வரச் சொன்னார் ஷாலினி தந்தை. அவள் வீட்டுக்கு வந்தான் அவர் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார் பதில் சொல்லாம கோவமா எந்திரிச்சு போயிட்டான். பைக்க உதைச்சி கிளம்பினான் கொஞ்ச தூரம் போயி சுபாஷ்க்கு போன் செய்தான் விபரத்தை சொன்னான். மறுநாள் ஷாலினி தந்தை இருட்டு அறையில் அவர் முன்னின்று முகத்தில் கருப்பு துணியுடன் ஒருவன் யாருக்கோ போன் செய்தான் அவனிடம் இவரை என்ன செய்யனும்னு பேசிகிட்டே கீழே கெடந்த கம்பிய எடுத்து ஷாலினி அப்பா வாயிலே அடிச்சான் சில பற்கள் பறந்தன வாயில் ரத்தம் வழிந்து அலறினார். ஏன்டா வாய உடைக்கச் சொன்ன அப்படி என்னல கேட்டான். மறுமுனையில் மானூரிலிருந்து ஷாலினியுடன் சென்னை பயணம் செய்த உபேந்திரா பதில் சொன்னான் பொண்ணு தரலனு சொன்னா கூட பரவாயில்லை அவன் கேட்ட கேள்வி
உன் ஜாதி என்ன????