கிறுக்கி

உன்கிட்ட பேச வந்தேன்
ஏன்டி நீ ஏசிப் போற

காதல் தான் சொல்ல வந்தேன்
கல் வீசி ஒடச்சு போற

உன்னோட கைய பிடிக்க நானும்தான் காத்துக் கிடக்கேன்

இதயத்த அறுத்து எடுத்து கையோட கொண்டு போற

வெக்கத்த விட்டுப்புட்டு வேண்டி நான் கேக்குரேன்டி

வேணும்னு ஒத்த வார்த்த "பொய்யாச்சும்" சொல்லி போடி

இருக்க என் ஒத்த உசுர உனக்காக செதுக்கி தாரேன்

"ஆயுளுக்கும் தொட்டில் கட்டி கொழந்த போல பாத்துக்கிரேன்"

கண்ணோட மைய பூசி என்ன கட்டி போறவளே

தாலி ஒன்னு கட்ட வாரேன் கழுத்த காட்டு போதுமடி

"உன்னொட பெத்தவங்க பிடிக்கும்படி நான் இருப்பேன்"

அவங்களுக்கு புள்ளையாவும் சத்தியமா நான் நடப்பேன்

வேணாம்னு சொல்லாதடி வேகுதடி உள்மனசு

உன்ன விட வேற ஒருத்தி என் மனசு தேடாதடி

என்ன விட்டு போகாதடி,ஈரக் கொல எரியுதடி

உன்ன நான் பாத்ததுக்கு என் கண்ண நீ குத்திப் போற

கைப்பிடிச்சு கூட்டிப் போயி
காட்டுக்குள்ள விட்டு போற

காதல் தான் நானும் கேட்டேன்
கை ரெண்ட வெட்டி போற

என் காதல, நீ புதைச்சு மேல கல்லறையும் கட்டி போற

உன்ன நான் காதல் செய்ய உன் மனசே போதுமடி

என் காதல் புரிய உனக்கு நேரம் காலம் வேணுமடி

எப்போவாச்சும் என் வலி புரிஞ்சா
வந்து ஒத்த வார்த்த சொல்லு

புடிக்குமுன்னு சொல்ல வேணாம்

"என் காதல் புரிஞ்சதுனு சொல்லு போதும்"

உனக்காக காத்திருப்பேன்
உயிர் போகும் கடைசி வரைக்கும்..

"கிறுக்கி"இந்தக் கிறுக்கன் என்றும் உனக்காக..

#கரிசல்மகன்

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (11-Jul-17, 2:57 am)
சேர்த்தது : சிவக்குமார்
Tanglish : kirukki
பார்வை : 177

மேலே