உயிர் நீயே

உயிராய் நீ
என்னுள் வந்த பின்புதான்
வாழவே தொடங்கினேன்...

நீ இன்றி
எனது நாட்களில் நிஜமும்
நிழலாகி ஏங்கினேன்...

உன் அணைப்பின்
சுகம் களைந்து -உந்தன்
பார்வையில் குளிர் காய்கிறேன்!
நித்தமும் விலகாமல்
உன்னுள் மௌன உயிராகி அலைகிறேன்!

உன் காதலின்
மனம் கலந்து-உந்தன்
உயிருக்குள் துடிக்கிறேன்!
நிலை புரியாத
நேரங்களில் உன் நினைவாகி உறைகிறேன்!

ஆயிரம் வரிகள் எழுதிடினும்
உன்னை வார்த்தையில்
வடித்திட முடியாமல் தவிக்கிறேன்!

மீண்டும் அதிலே முடிக்கிறேன் -
"என் உயிர் நீயே"

எழுதியவர் : நிலா (11-Jul-17, 11:15 am)
பார்வை : 802

மேலே