பட்டாணி

ஏண்டி காவேரி, அந்தச் சின்னத் திரையிலே ஒருத்தி சிரிக்கறாளே அவ யாரடி?
😊😊😊😊😊
பாட்டிம்மா, அவுங்க ஒரு இந்தி நடிகை அவுங்க பேரு திஷா பட்டாணி.
😊😊😊😊😊😊
நிசா-ன்னு சொல்லறாங்க, திசா - ன்னும் சொல்லறாங்க. இப்ப பட்டாணியையும் கூடச்சேத்துட்டாங்க. பட்டாணில்லெல்லாம் பேரு வைக்கறதா?
😊😊😊😊😊
பாட்டிம்மா நிஷா -ன்னா இரவு. திஷா -ன்னா 'வழி காட்டுதல்' -ன்னு அர்த்தம். பட்டாணிங்கிறது குடும்பப் பேரா இருக்கும். இல்லன்னா சாதிப் பேரா இருக்கும்.
😊😊😊😊😊
நல்லா பேரு வைக்கறாங்கடி. இது வரைக்கும் அர்த்தம் தெரியாமலே எம் பேத்தி நிசாவைக் கூப்பிட்டு இருந்தண்டி பூங்கோதை. செவச்செவனு இருக்குற கொழந்தைக்குப் போயி இருட்டுன்னா பேரு வைக்கறது? நம்ம தாய் மொழிய சினிமா ரசனையில படிச்சவங்களே சீரழிக்கறாங்கடி பூங்கோதை.
😊😊😊😊😊
யாரைக் குறை சொல்லறதுங்க பாட்டிம்மா. தமிழ் சீரிழிறதுக்கு பெத்தவங்க, ஆசிரியர்கள், ஊடகங்கள் எல்லாமே காரணமா இருக்கறாங்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க.
தமிழுணர்வைத் தட்டி எழுப்ப.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Disha = Direction
Nisha= Night
Patani

எழுதியவர் : மலர் (11-Jul-17, 5:47 pm)
பார்வை : 207

மேலே